Publish Date: Mon, 30 Jun 2008 (15:17 IST)
Updated Date: Mon, 30 Jun 2008 (15:16 IST)
பாலா பலரை பாதித்திருக்கிறார். பாலாவை பாதித்த இயக்குனர்? பாலுமகேந்திரா தொடங்கி பலபேர் இருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் சின்னத்திரை இயக்குனர் ஒருவரும் பாலாவின் மனம் கவர்ந்துள்ளார்.
கனவே கலையாதே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வ. கெளதமன். பிறகு ஜெயகாந்தனின் புகழ்பெற்ற கதையான சினிமாவுக்குப் போன சித்தாளை குறும்படமாக இயக்கினார். ஆனாலும், மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்தனக்காடு தொடரே இவரை விரிவான தளத்தில் அறிமுகப்படுத்தியது.
நான் கடவுள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதும், சந்தனக்காடு தொடரை பாலா தொடர்ந்து பார்த்து வந்தார். தொடரின் கிளைமாக்ஸ் நெருங்க... நெருங்க... பாலாவும் தொடரில் முழுக்க தன்னை கரைத்துவிட்டார்.
சொந்தமாக படம் தயாரித்தால் முதல் இயக்குனர் கெளதம்தான் என்றிருக்கிறார் பாலா. ஒரு சின்னத்திரை இயக்குனருக்கு கிடைத்த பெரிய பாராட்டு இதுவாகவே இருக்கும்!