Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆனந்த தாண்டவம் - சலே அமெரிக்கா!

Advertiesment
ஆனந்த தாண்டவம் - சலே அமெரிக்கா!
, திங்கள், 30 ஜூன் 2008 (14:25 IST)
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்துவது ஏதோ அமைந்தகரைக்கு போவது போல் ஆகிவிட்டது. ஆஸ்கர் ஃபிலிம்சின் தசாவதாரம், வாரணம் ஆயிரம் படங்களைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம் மீண்டும் இரண்டு நாள் முன்பு அமெரிக்கா கிளம்பியது.

புதுமுகம் சித்தார்த், தமன்னா நடிக்கும் ஆனந்த தாண்டவத்தின் முக்கிய காட்சிகள் அமெரிக்காவில் நடப்பதாக கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா. இதற்காகவே இந்த அமெரிக்க பயணம்.

பிரசன்னா, சினேகா நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

உள்ளூரில் அரசின் கெடுபிடி, வாடகை, ஜன நெரிசல், நடைமுறை சிக்கல் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்துவது சாலச் சிறந்தது என கருதுவதால்தான் அனைவரும் அமெரிக்கா, பிரேசில் என கிளம்புகிறார்கள்.

அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.

Share this Story:

Follow Webdunia tamil