விஜய், நயன்தாரா நடிக்கும் வில்லு வேகமாகத் தயாராகி வருகிறது. பிரபுதேவா பழனியைத் தொடர்ந்து காரைக்காலில் விஜய்- நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார்.
வில்லு படத்தில் வெளிநாடு ஒன்று இடம்பெறுவதாக வில்லு யூனிட் கூறுகிறது. இதற்காக இத்தாலியைத் தேர்வு செய்துள்ளார் பிரபுதேவா என்கிறார்கள்.
இந்த வதந்தி உண்மையானால் ஜூலை மாதம் விஜய்- நயன்தாரா உள்பட வில்லு யூனிட் இத்தாலி கிளம்புகிறது. அங்கு முக்கியக் காட்சிகளுடன் இரண்டு பாடல் காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.
அடுத்த வாரம் வில்லுவின் இத்தாலி பயணம் குறித்த அதிகாரபூர்வமான செய்தியை எதிர்பார்க்கலாம்.