சுவாமி தோப்பு வைகுண்ட சாமிகளின் மகிமையைச் சொல்லும் படம் அய்யாவழி. பி.சி.அன்பழகன் இயக்கியிருக்கும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
சுவாமி தோப்பு பகுதியில் சமபந்தி அன்னதானம் புகழ் பெற்றது. இங்கு செல்லும் பக்தர்கள் கிணற்றில் குளித்துச் சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டிச் செல்ல வேண்டும். இடுப்பில் துண்டு கட்டிச் சேவகம் செய்யும் இழிநிலை எந்த மனிதர்க்கும் கிடையாது, அனைவருக்கும் தன்மானம் முக்கியம் என்பதை உணர்த்தவே இந்தத் தலைப்பாகை.
அதேபோல அனைவரும் சமம் என்பதை உணர்த்த தினமும் சமபந்தி போஜனம் உண்டு.
அய்யாவழி வெளியாகும் திரையரங்குகளில் அன்னதானம் செய்யப்படும் என்று நாகர்கோவிலில் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்தார் இயக்குநர் பி.சி.அன்பழகன்.
தமிழகம் முழுக்க 40 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. அனைத்து திரையரங்குகளிலும் அன்னதானம் செய்ய முயற்சிப்போம் என்றார் அவர்.