சண்டை படத்துக்குப் பிறகு ஷக்தி சிதம்பரம் தனது சினிமா பாரடைஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம் ராஜாதி ராஜா. இதில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.
லாரன்ஸ் ஜோடியாக நடிக்க லட்சுமிராயிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருப்பவர், அந்த வாய்ப்பை நிராகரித்தார். இப்போது அவருக்கு பதில் சந்தியா நடிக்கிறார்.
ராஜாதி ராஜாவில் சந்தியாவை தவிர்த்து மேலும் ஐந்து நாயகிகள் நடிக்கிறார்களாம். லட்சுமிராய் படத்தில் நடிக்க மறுக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
மற்ற நாயகிகள் தேர்வு வேகமாக நடந்து வருகிறது.