பாலசந்தர், துணிச்சலான முயற்சி, அற்புதமான படம் என்று பாராட்டியிருக்கிறார். ரீ-ரிக்கார்டிங்கில் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் இளையராஜா. கதைக்காகவே, சினிமா எடிட்டிங்கிலிருந்து ஒதுங்கியிருந்த பி. லெனின் படத்தை எடிட் செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி பிரபலங்களை பிரமிக்க வைத்த தனம் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
தனத்தில் தாசி குலப் பெண்ணாக நடித்துள்ளார் சங்கீதா. தாசி என்றதும் செக்குமாடாக அதையே சுற்றிவராமல் வேறு சில விஷங்களையும் அலசுகிறதாம் படம்.
சங்கீதாவுக்கு இதில் மூன்று விதமான குணாம்சங்களை வெளிப்படுத்தும் வேடம். கிளாமராக தாசிக்குரிய குணங்கள். இன்னொன்று குடும்பப் பாங்கான பணிவான குணம். பழிவாங்கும் ரெளத்திர முகம் மூன்றாவது.
பழிவாங்கும் டெரர் முகம் பற்றி அதிகம் பேசாமல் ரகசியம் காக்கிறார் இயக்குனர் ஜி. சிவா. படத்தின் ஹைலைட் விஷயம் என்பதால் இந்த ரகசியமாம்!