நியூட்டனின் 3-ஆம் விதி குறித்து பல்வேறு புதுமையான செய்திகள். படம் ஒரே நாளில் நடக்கும். அதுவும் சில மணி நேரக் கதையைச் சொல்கிறது. எஸ்.ஜே.சூர்யா ஒரு கேரக்டரில் நடித்தாலும் படத்தில் இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். காதலிக்காக சூர்யா பலிவாங்குவதுதான் கதை.
இத்தனையும் கூட்டிச் சேர்த்து இது மோனிகா பெலூசி நடித்த 'இர்ரிவர்ஸிபிள்' (irreversible) படத்தின் கதை என காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்து அறிவுஜீவிகள்.
இது ஓருபுறம் இருக்கட்டும். எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டருக்கு வருவோம். எஸ்.ஜே.சூர்யாவும் ஷாயாலியும் காதலிக்கும் காட்சிகளில் சாஃப்டான தோற்றத்தில் தோன்றுவாராம் எஸ்.ஜே.சூர்யா. காதலிக்காகப் பலி வாங்கும் காட்சிகளில் டெரராக மாறுவாராம்.
படத்தின் கதை சொல்லும்போதே கரண்ட் வைக்கிறார்கள். படம் வெளியாகும்போது என்னென்ன வைக்கப் போகிறார்களோ.