ஸ்ரீதரின் காதிலிக்க நேரமில்லை ரீ-மேக் ஆகிறது. ரீ-மேக் உரிமையை ஸ்ரீதரிடம் இருந்து இயக்குநர் மனோபாலா வங்கிப் பல மாதங்களாகிறது. நடிகர்கள், இயக்குநர் தட்டுப்பாடு. ஒரு வழியாக இப்போது ஒழுங்கிற்கு வந்துள்ளது காதலிக்க நேரமில்லை ரீ-மேக்.
முத்துராமன் நடித்த வேடத்தை ஏற்கவுள்ளது பசுபதி. குசேலன், ராமன் தேடிய சீதை, வெடிகுண்டு முருகேசன், தநா 07 அல 4777 படங்களுக்குப் பிறகு காதலிக்க நேரமில்லை ரீ- மேக்கில் நடிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி இருந்தது. மனோபாலாவே இயக்குவாரோ என்ற பயமும் இருந்தது. கடவுளின் கருணை.... அப்படி எந்த விபரீதமும் நடக்கவில்லை. பல நகைச்சுவைப் படங்களை இயக்கிய கே.செல்வபாரதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வருட இறுதியில் படத்தைத் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.