வார்த்தைகளால் பலம் பார்த்துக் கொண்டனர் பாடலாசிரியர் வைரமுத்துவும், நடிவர் விஜயும். முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இசை வெளியீட்டு விழாவில், நம்பமுடியாத ஆச்சரியமாக இசையமைப்பாளர் வித்யாசாகரையும், பாடலாசிரியர் வைரமுத்துவையும் முக்கியத்துவம் கொடுத்து பாராட்டினர்.
கவிஞர் அதில் கவிழ்ந்து விட்டால்போல. தனது முறை வந்தபோது மைக் பிடித்தவர், குத்துப்பாட்டு கலாச்சாரத்தை குத்திக் கிழிக்கத் தொடங்கினார். ஊறுகாய் சாப்பிடலாம், அதுக்காக இலை முழுக்க ஊறுகாய் வைத்து சாப்பிட முடியுமா? அதுபோல பத்து பாட்டு இருந்தால் ஒரு குத்துப்பாட்டு வைக்கலாம். பத்தும் குத்தாக வைத்தால் எப்படி என சலம்ப, சபையில் சலபலப்பு.
கவிஞர் புயலாடி முடித்ததும், விஜய் பேசினார். கவிஞரின் பவுன்சருக்கெல்லாம் சிக்கர் விளாசியது போலிருந்தது அவரின் பேச்சு. குத்துதான் எனக்குப் பிடிக்கும். இந்தப் படத்திலும் (முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு) குத்துப் பாட்டுதான் எனக்கு பிடித்திருக்கிறது என குத்துக்கு ஆதரவாக எதிர்குத்துவிட, கவிஞரின் முகத்தில் கார் மேகம்.
இருவருக்குள்ளும் அப்படியென்ன குத்தோ தெரியவில்லை!