Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்தெடுக்கும் நமிதா!

Advertiesment
முத்தெடுக்கும் நமிதா!
, புதன், 25 ஜூன் 2008 (19:59 IST)
என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் கால்வாசி கதையும், முக்கால்வாசி கவர்ச்சியுமாக தயாராகி வருகிறது ஜகன் மோகினி.

பெயர் ஒன்று என்றாலும், விட்டலாச்சாரியாரின் ஜகன் மோகினிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையாம். இதில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணாக வருகிறாராம் நமிதா. (அப்படியானால் படம் முழுக்க நனைந்த உடைதான்!)

தெலுங்கு நடிகர் ராஜா இளவரசராக வருகிறார். வேற்று நாட்டு இளவரசியாக நிலா.

பழைய ஜகன் மோகினியில் நாயகனாக நடித்த நரசிம்மராஜுக்கு இதில் அப்பா வேடம். அம்மாவாக நடிப்பவர் யுவராணி.

புராணக் கதைக்களம் என்பதால் பிரமாண்ட அரங்குகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நமிதா மூழ்கி முத்தெடுப்பதை தத்ரூபமாக காட்டுவதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் கேமராக்களும், லைட்களும் வரவழைத்திருக்கிறார்களாம்.

படம் பார்த்து எத்தனை பேருக்கு குளிர் ஜுரம் வரப்போகிறதோ!

Share this Story:

Follow Webdunia tamil