அப்பா வேடம் விஜயகாந்துக்கு அல்வா மாதிரி. வெள்ளை தலைமுடி, கதர் சட்டை-வேட்டி, உடம்பு அலங்காத நடை, கூப்பிட்ட குரலுக்கு கழுத்து சுளுக்கியவர் போல் மெதுவாக தலைதிருப்பிப் பார்த்தால்... அப்பா விஜயகாந்த் தயார்!
விக்ரமனின் வானத்தைப் போல படத்தில் விஜயகாந்துக்கு அண்ணன், தம்பி என்று இரண்டு வேடம். கதைப்படி அண்ணன் என்றாலும் மேனரிஸம் எல்லாம் நாம் மேலே சொன்ன அப்பா மாதிரிதான்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் விக்ரமன் இயக்கும் படத்திலும் விஜயகாந்துக்கு இரண்டு வேடங்கள். அப்பா, மகன். இதில் மகனுக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். அப்பாவுக்கு ஜோடி தேடி வருகிறார்கள்.
விஜயகாந்த் வயதான கெட்டப் போட்ட எல்லாப் படங்களுமே ஹிட்டாம். அதனால் இதுவும் ஹிட் என படம் தொடங்கு முன்பே ஆருடம் சொல்கிறார்கள். ஆருடம் பலித்தால் அனைவருக்கும் நல்லது.