சென்னை 600028 படம் பார்த்து வெங்கட்பிரபுவை பாராட்டியவர்களில் முக்கியமானவர் அஜித். தனியாக அழைத்து வெங்கட்பிரபுவை பாராட்டியதோடு, நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால், சேர்ந்து படம் பண்ணலாம் என ஊக்குவித்தார்.
சரோஜாவை இயக்கிவரும் வெங்கட்பிரபுவிடம் தற்போது தல சொன்ன நல்ல ஸ்கிரிப்ட் சிக்கியிருக்கிறது. சரோஜாவுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் அஜித் நடிப்பதாக இருக்கும்.
நெருங்கிய நண்பர்களிடம் அஜித்தை இயக்குவதை உறுதி செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. விரைவில் அதிரடி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.