Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாளவிகா மீது மானநஷ்ட வழக்கு!

Advertiesment
மாளவிகா மானநஷ்ட வழக்கு ஆஞ்சநேயலு
, செவ்வாய், 24 ஜூன் 2008 (19:35 IST)
தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு தவறாக நடக்க முயன்றார் என வெடியை கொளுத்தி வீசிவிட்டு மும்பை சென்றுவிட்டார் மாளவிகா. அது இரட்டை வெடியாக தனக்கு எதிராக வெடிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். துரதிர்ஷ்டம்... அப்படித்தான் நடந்துள்ளது.

கார்த்தீகை படத்தின் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு. இவர் மாளவிகாவின் கேரவனுக்குள் நுழை‌ந்து, கர்ப்பமாக இருந்தால் வயிறை காட்டு பார்க்கலாம் என்று கேட்டதோடு, மாளவிகாவை தொட முயன்றார் என்று குற்றச்சாட்டு. மாளவிகா இந்த குற்றச்சாட்டை கூறியதோடு மும்பை கிளம்பிவிட்டார். மேற்கொண்டு படத்தில் நடிப்பதென்றால், குழந்தை பிறந்த பிறகுதான் என்றொரு குண்டும் போட்டார்.

இதுபோல் பலபேரை பார்த்திருப்பார் ஆஞ்சநேயலு. ஜூலை 1 ஆம் தேதிக்குள் மாளவிகா படப்பிடிப்புக்கு வரவேண்டும், இல்லாவிடில் மாளவிகா படத்திலிருந்து நீக்கப்படுவதோடு அவர் மீது நஷ்டஈடு வழக்கு போடப்படும். தவிர, பொய்யான குற்றச்சாட்டை கூறி அவமானப்படுத்தியதற்கு தனியாக நஷ்டஈடு வழக்கும் போடப்படும்.

எப்படி பார்த்தாலும் வில்லங்கம் என்பதால், வீசிய வெடியை எப்படி அணைப்பது என ஆலோசனை நடத்தி வருகிறார் மாளவிகா.

Share this Story:

Follow Webdunia tamil