Publish Date: Tue, 24 Jun 2008 (14:15 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (12:28 IST)
சென்னையில் நேற்று நடந்த சினிமா படப்பிடிப்பின் போது பலியான இரண்டு பேர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில், நேற்று தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, லிப்ட் கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக உதயகுமார், சிகாமணி என்ற திரைப்பட ஊழியர்கள் இருவர் இறந்துவிட்டனர்.
இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் கருணாநிதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், அந்தக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட ஆணையிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.