Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் சிம்பு!

Advertiesment
நடனக் காட்சி சிலம்பாட்டம் சிம்பு
, திங்கள், 23 ஜூன் 2008 (19:34 IST)
ஆக்சன் காட்சிகளில் ரிஸ்‌க் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். நடனக் காட்சிகளில்...? ஒருவர் இருக்கிறார், சிம்பு!

கடினமான அசைவுகளை மாஸ்டரிடம் கேட்டு வாங்கி, உடம்பில் பிளாஸ்திரி போட்டுக் கொள்வதில் சிம்புவுக்கு அப்படி ஒரு ஆர்வம். 'காளை' படத்தின் பாடல் காட்சியில் கட்டை விரலை உடைத்துக் கொண்டார். இப்போது உடைந்திருப்பது கால் மூட்டு.

சிலம்பாட்டம் படத்தில் வாலி எழுதிய தமிழ் என்ற நானொரு தமிழண்டா என்ற பாடல் இடம்பெறுகிறது. இதனை பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியில் படமாக்கினார் இயக்குனர் சரணவன். பாடலுக்கு நடனம் அமைத்தவர், ஆல்தோட்ட பூபதி போன்ற மாஸ் பாடல்களுக்கு நடனம் அமைத்த அசோக்ராஜ்.

பாடல் காட்சியில் கால் முட்டியை கீழே ஊன்றி எழுவதாக ஒரு கடினமான ஸ்டெப். ரிகர்சலில் சரியாக செய்த சிம்பு, டேக்கில் சிறிது ஸ்லிப்பாக, முட்டி தரையில் பயங்கரமாக மோதியிருக்கிறது. வலியால் துடித்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிம்புவை பரிசோதித்த மருத்துவர்கள் மூட்டு எலும்பு உடைந்திருப்பதாக தெரிவித்தனர்.

சிம்பு மாவு கட்டுடன் ஓய்வு எடுக்க, அவரது வரவுக்காக காத்திருக்கிறது சிலம்பாட்டம்.

Share this Story:

Follow Webdunia tamil