சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க வருகிறார். மகளுக்காக இயக்குனர் விக்னேஷ் சிவாவிடம் கதை கேட்டார் சரத்குமார்.
சரத்குமார் - சாயா (சரத்தின் முன்னாள் மனைவி) தம்பதியின் மகன் வரலட்சுமி. வெளிநாட்டில் படித்த இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட், ஷெனாயா ஃபிலிம்சுடன் இணைந்து தயாரிக்கும் திரு. போடா திரு. போடியில் சிம்புவின் ஜோடியாக வரலட்சுமி அறிமுகமாகிறார்.
விக்னேஷ் சிவாவிடம் படத்தின் கதையை முழுமையாக கேட்ட சரத், மகள் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மேலுமொரு வாரிசு... வரவேற்போம்!