அம்முவாகிய நான் படத்தில் நடித்த பாரதிக்கு திருமணம். மாப்பிள்ளை அவரது உறுவினராம்.
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் பாரதி வீட்டு வாசலில் க்யூ கட்டினர். ஆனால் பாரதி அகத்தியனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு மட்டும் கால்ஷீட் கொடுத்தார். படம் ப்ளாப். தற்போது பாரதி நடித்துவரும் ஒரே படம், சற்றுமுன் கிடைத்த தகவல்.
நடுவில் எங்க ராசி நல்ல ராசி, விஜயகாந்தின் எங்கள் ஆசான் படங்களில் நடிக்க பாரதிக்கு வாய்ப்பு வந்தும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
விரைவில் திருமணம் நடப்பதால்தான் அந்தப் படங்களில் நடிக்கவில்லை என்று இப்போது உண்மையை வெளியிட்டிருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு பாரதி நடிக்க மாட்டாராம். எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.