கலைச்சேவை செய்வதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் தூத்துக்குடியில் அறிமுகமான கார்த்திகா. இதனால் கமிஷனர் வரை இழுபட்டிருக்கிறது கார்த்திகாவின் பெயர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் காலனியில் மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார் கார்த்திகா. இனி ஓவர் டூ மணிவண்ணன்.
குடிவந்த முதல் மாதம் வாடகை ஏழாயிரம் ரூபாய் தந்தார்கள். பிறகு பல மாதங்களாகத் தரவில்லை. கேட்டால், கார்த்திகா நடிகை, நடிகையிடம் காசு கேட்கக் கூடாது என கார்த்திகா, அவரது தம்பி, தொழிலதிபர் ஒருவர் என மூவருமாகச் சேர்ந்து மிரட்டுகிறார்கள். மீறிக் கேட்டால் குடும்பத்தோடு குளோஸ் பண்ணிவிடுவோம் என்கிறார்கள் என்றார் மணிவண்ணன்.
இதனைப் புகாராக எழுதி நேற்று கமிஷனரிடம் நேரில் தந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார்.