Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயா‌ரி‌ப்பாள‌ர் டா‌ர்‌ச்ச‌ர்- மாள‌விகா ஓ‌ட்ட‌ம்!

தயா‌ரி‌ப்பாள‌ர் டா‌ர்‌ச்ச‌ர்- மாள‌விகா ஓ‌ட்ட‌ம்!
, சனி, 21 ஜூன் 2008 (20:39 IST)
தனது க‌ற்பு வளைய‌த்‌தி‌ற்கு‌ள் ‌பிரவே‌சி‌க்க முய‌ன்றதாக இதுவரை மூவ‌ர்‌மீது புகா‌ர் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர் மாள‌விகா. இ‌ப்போது மாள‌விகா‌வி‌ன் க‌ற்பு‌க்கு‌ச் சவா‌ல் ‌வி‌ட்டதாக கூற‌ப்படுவது தயா‌ரி‌ப்பாள‌ர் ஆ‌ஞ்சநேயலு.

வி‌க்ரமா‌தி‌த்யா, மாள‌விகா, ச‌மி‌க்ஷா நடி‌ப்‌பி‌ல் கா‌ர்‌த்‌திகை பட‌த்தை‌த் தயா‌ரி‌த்து வரு‌கிறா‌ர் தெலு‌ங்கு‌க்காரரான ஆ‌ஞ்சநேயலு. பட‌ம் தொட‌ங்கு‌ம் போது மாள‌விகா ‌திருமணமான புது‌ப்பெ‌ண். இர‌ண்டாவது ஷெ‌ட்யூ‌ல்டி‌ன்போதோ ஐ‌ந்து மாத க‌ர்‌ப்ப‌ம்.

டா‌க்ட‌ரி‌ன் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல் மாள‌விகா ஆடினா‌ர் எ‌ன்ற செ‌ய்‌‌தி வ‌ந்தது‌ம் இ‌ந்த‌ப் பட‌த்தை‌ப் ப‌ற்‌றி‌த்தா‌ன். ஒரு க‌ட்ட‌த்‌தி‌ற்கு மே‌ல், காலை‌த் தூ‌க்க முடியாது, இடு‌ப்பை அசை‌க்க முடியாது எ‌ன்று தகராறு செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர் மாள‌விகா. இதனா‌ல் தயா‌ரி‌ப்பாளருட‌ன் வா‌ய்‌த்தகராறு மு‌ற்‌றி, தனது கேரவ‌னி‌ல் இரு‌ந்து வெ‌ளியே ஓடி வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர். ஆ‌ஞ்சநேயலு எ‌ன்னை‌த் தொட‌ப் பா‌ர்‌த்தா‌‌ர் எ‌ன்று கூ‌றியவ‌ர் அடு‌த்த கணமே எ‌ஸ்கே‌ப்.

ஆ‌ஞ்சநேயலு ஆபாசமாக மாள‌விகாவை பே‌சியது உ‌ண்மைதா‌ன் எ‌ன்றா‌ர் கா‌ர்‌த்‌திகை பட‌த்‌தி‌ன் இய‌க்குந‌ர் ‌வீரா. "ஆனா‌ல் அ‌ப்போதே தயா‌ரி‌ப்பாளரை மாள‌விகா‌விட‌ம் ம‌ன்‌னி‌‌ப்பு‌க் கே‌ட்ட வை‌த்தே‌ன். அ‌த்தோடு ‌பிர‌ச்சனை முடி‌ந்தது. ஆனா‌ல், நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ‌திடீரென நடி‌க்க முடியாதெ‌ன்று ‌கிள‌ம்‌பி ‌வி‌ட்டா‌ர்" எ‌ன்றா‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் இரு‌க்கு‌ம் மாள‌விகா, குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு நடி‌த்து‌க் கொடு‌க்‌கிறே‌ன் எ‌ன்‌‌கிறா‌‌ர். அத‌ற்கு‌ள் ஒரு வருட‌ம் ஓடி‌விடு‌ம். அதுவரை முத‌லீடு செ‌ய்த நா‌ன்கு கோடி‌க்கு எ‌ப்படி வ‌ட்டி க‌ட்டுவது எ‌ன்று க‌ன்ன‌த்‌தி‌ல் கை வை‌த்து யோ‌சி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர், மாள‌விகாவா‌ல் 'நொ‌ந்த'நேயலுவான ஆ‌ஞ்சநேயலு.

Share this Story:

Follow Webdunia tamil