பொள்ளாச்சியில் சிலம்பாடிக் கொண்டிருந்த சிம்பு திடீர் பயணமாக கனடா சென்றார். சிம்புவின் புதிய படம் போடா போடியின் பெரும்பாலான காட்சிகள் கனடாவில் படமாக்கப்படுகிறது. அதற்கு லொக்கேஷன் பார்க்கவே இந்த விசிட்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட், ஷெனாயா ஃபிலிம்சுடன் இணைந்து போடா போடியை தயாரிக்கிறது. விக்னேஷ் சிவா இயக்கம். தரண் இசை.
கனடா சென்ற சிம்பு லொக்கேஷன் பார்த்ததோடு ஒரில்லியா மேயர் ரான் ஸ்டீவன்சனையும் சந்தித்தார். அவரிடம் படப்பிடிப்பு நடத்த அரசின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேயர், முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்களித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய சிம்பு, படத்துக்கு நாயகி இன்னும் அமையவில்லை, ஸ்ரேயா நடிப்பதாக வந்த செய்தி வெறும் வதந்தி என்றார்.