கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று ரஜினி சொன்ன பிறகும் அறுபது கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது குசேலன். படம் அறிவித்த நாலே மாதத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படத்தை முடித்த பி. வாசு நிருபர்களைச் சந்தித்தார்.
குசேலன் குறித்த ஹாஸ்யங்களுக்கு சிரிப்பை பதிலாக்கியவர், அள்ளி இறைத்த தகவல்கள் நிறைய.
தமிழ் திரையுலகின் 75வது வருட பவள விழாவை குறிக்கும்,
சினிமா சினிமா சினிமா
எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர். இருந்த சினிமா...
என்ற பாடல் மட்டும் பாக்கி.
சினிமாவின் புகழைச் சொல்லும் இந்தப் பாடலில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட 30 முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைப்பதாகத் திட்டம். பாடல்கள் வரும் 30 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.
ரஜினி ரோபோவில் நடிக்க உள்ளதால் செப்டம்பர் ரிலீஸை ஜூலைக்கு மாற்றி வைத்துள்ளனர்.
பேட்டியின் போது, படத்துக்குப் படம் ரஜினி இளமையாகி வருகிறார் என்றார் பி. வாசு. உண்மை! குசேலன் ஸ்டில்களில் ரஜினி சிவாஜியில் பார்த்ததைவிட படு ஸ்மார்ட்!