Publish Date: Fri, 20 Jun 2008 (13:12 IST)
Updated Date: Fri, 20 Jun 2008 (13:11 IST)
திமிரு, காளை என்று இரண்டு படங்கள். மூன்றாவது படத்தில் மற்றவர்களை நம்பாமல் தானே ஹீரோவாகியிருக்கிறார் தருண்கோபி. படத்தின் பெயர் காட்டுப்பயலே!
தருண்கோபியை ஹீரோவாக்கும் தைரியம் கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. அதனால் மதுரா டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தருண்கோபியே படத்தை தயாரிக்கிறார்.
திமிருவில் வெளுத்து வாங்கிய வைகைப் புயல் காட்டுப்பயலிலும் உண்டு. காமெடியன் கிடைத்த அளவுக்கு எளிதாக இல்லை கதாநாயகி சமாச்சாரம். ரீமா சென்னிடம் பேசி கால்ஷீட் வாங்கிவிட்டார் என்று தருண்கோபியின் நலம் விரும்பிகள் கூறுவதில் பலருக்கும் நம்பிக்கையில்லை. என்றாலும், காட்டுப்பயலே ஹீரோயின் ரீமா சென் என்ற சேதி காட்டுத் தீயாக பரவிவிட்டது.
விரைவில் ரீமா சென்னிடமிருந்து இதுகுறித்து அறிக்கை வரலாம். அது தீயாகவும் இருக்கலாம், தித்திக்கும் தீயாகவும் இருக்கலாம்!