இன்று காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள். ஜாலியாகக் கொண்டாட வேண்டிய நாள், காஜலுக்குத் தலைவலியுடன் விடிந்திருக்கிறது.
நேற்று ஏ.வி.எம்.மில் நடந்த மோதி விளையாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் காஜல். இவரும் வினய்யும் பாடல் காட்சியில் கத்தியுடன் ஆட வேண்டும். கவனக் குறைவால் வினய் கையிலிருந்த கத்தி காஜலின் பின்னந்தலையைக் கீறி விட்டது.
ரத்தம், வலி, பதற்றம், மருத்துவமனை... எல்லாம் முடிந்து பார்த்தால் காஜலின் தலையில் ஆறு தையல்கள்.
படப்பிடிப்பு டென்ஷன் இல்லாமல் தலைவலியுடன் ரிலாக்ஸாக இன்று பிறந்த நாள் கொண்டாடினார் காஜல்.