வெளிநாடுகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது கமலின் பத்து அவதாரம். அமெரிக்காவில் தென்னிந்திய மொழி திரைப்படங்களிலேயே அதிக பிரிண்டுகள் வெளியாகியிருப்பது ஒரு சாதனை. இரண்டாவது, வசூல்.
U.K.யில் படம் வியாழன் அன்று வெளியானது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நான்கு நாட்களில் மொத்த வசூல் 1.07 கோடி. வசூல் வரிசையில் பன்னிரெண்டாவது இடம்.
U.K.யில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் தசாவதாரதிற்கே முதலிடம். இதனுடன் வெளியான இந்திப் படம் Mere Baap Pehle Aap பத்தின் மொத்த வசூல் 85.96 லட்சங்கள் மட்டுமே!
தசாவதாரத்திற்கு முந்தைய வாரம் வெளியான அமிதாப்பச்சனின் சர்க்கார் ராஜுக்கு பாக்ஸ் ஆபிஸில் பதினைந்தாவது இடம். வார இறுதி வசூலில் சர்க்கார் ராஜையும் பின்னுக்கு தள்ளியுள்ளது தசாவதாரம். அமெரிக்காவிலும் படம் அடிபின்னுகிறதாம்.
தயாரிப்பாளருக்கு இது நல்ல செய்தி.