பாராட்டுறாங்க, பரிசெல்லாம் குடுக்கிறாங்க. இளம் ஹீரோக்களின் ஹீரோயின் பட்டியலில் மட்டும் நான் இல்லையே! ப்ரியாமணியின் இந்த புலம்பலுக்கு புள்ளி வைத்திருக்கிறது ஆறுமுகம்.
ஹரியின் சேவலுக்குப் பிறகு பரத் நடிக்கயிருக்கும் படம் ஆறுமுகம். பரட்டை என்கிற அழகுசுந்தரத்திற்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம்.
இதில் பரத் ஜோடியாக ப்ரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். ப்ரியாமணியின் ஹிட் லிஸ்டில் விஜய், அஜித், விக்ரம், சிம்பு, சூர்யா, தனுஷ் என்று முன்னணி இளம் ஹீரோக்களின் பெயர்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் முதல் முறையாக க்ளிக்காகியிருக்கிறார் பரத்.
பரத்தின் ராசி ப்ரியாமணிக்கு எப்படி ஒர்க்- அவுட் ஆகிறது. பார்ப்போம்!