ஊர் பெயர்களால் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பேரரசு. அவருக்கு போட்டியாக வந்திருக்கிறார், சுரேந்தர்.
இவர் இயக்கும் படத்தின் பெயர் நாகர்கோவில். பிருத்விராஜ், பத்மப்ரியா நடிக்கின்றனர்.
சாமியின் சரித்திரத்தில் நடிக்க மறுத்த பத்மப்ரியா, சுரேந்தர் சொன்ன கதை கேட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். நாகர்கோவில் தவிர, பத்மப்ரியா நடிக்கும் ஒரே தமிழ்ப்படம் சேரனின் பொக்கிஷம்.
நினைத்தாலே இனிக்கும், மணிரத்னத்தின் பெயரிடப்படாத படம் இவை தவிர மலையாள தெலுங்கு படங்கள் என பிருத்வி ஏக பிஸி. இதனிடையில் நாகர்கோவில் நடிக்க ஒப்புக் கொள்ள காரணம், அவரது கேரக்டர்.
படத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வருகிறாராம் பிருத்விராஜ். இதுவரை அவர் ஏற்று நடிக்காத விதத்தில் கேரக்டரை அமைத்திருக்கிறாராம் சுரேந்தர்.
சத்தம் போடாதேக்குப் பிறகு பிருத்வி- பத்மப்ரியா இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.