சமீபத்தில் வெளியான விஷாலின் பேட்டி படித்து பலருக்கு ஆச்சரியம். சீராக போய்க் கொண்டிருக்கும் சினிமா கேரியரை அவராகவே ஏன் சிதைக்கிறார்?
சத்யம் படம் முடிந்ததும் அடுத்து குழந்தைகளை கவரும் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கிறேன். இது பிரமாண்ட பட்ஜெட். என்னுடைய கனவுப் படம் என்றெல்லாம் சொன்னார் விஷால். கடைசியாகச் சொன்னதுதான் அதிர்ச்சி. இந்தப் படத்தை நானே இயக்கப் போகிறேன் என்றார் விஷால்.
சண்டக்கோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை என ஏறுமுகத்தில் செல்லும்போது, ஏனிந்த விபரீத முடிவு என்று அனைவருக்கும் ஆச்சரியம். இந்த விளையாட்டு வேண்டாம் என்று சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து வற்புறுத்த தனது இயக்குனர் ஆசையை தற்காலிகமாக மூட்டை கட்டியிருக்கிறார் விஷால்.
சத்யத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிசுக்கு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளார். தேவை நல்ல கதையும், திறமையான இயக்குனரும்.
இந்த இரண்டையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.