ஜூலை ஆறு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல். தற்போதைய சங்கத் தலைவர் ராம.நாராயணன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் தலைமையிலான அணிக்கு தயாரிப்பாளர் சங்க முன்னேற்ற அணி என்று பெயர். இதில் காஜா மைதீன், அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இவர்களை எதிர்த்து போட்டியிடும் அணி, கேயார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க முற்போக்கு அணி. ராதிகா, எஸ்.ஏ.சி. போன்றவர்கள் இந்த அணியில் உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மொழிக்கென திரைப்பட வர்த்தகசபை உண்டு. அதில் ஆதிக்கம் செலுத்துவது அம்மொழியைச் சார்ந்தவர்களே. தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய, தென்னிந்திய சினிமா வர்த்தகசபை செயல்படுகிறது.
இதன் அலுவலகம் சென்னையில் இயங்கினாலும் இதில் ஆதிக்கம் செலுத்துவதெல்லாம், தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் ஏறக்குறைய இதுதான் நிலைமை.