பாலியல் தொழிலாளி வேடத்தின் மீது நடிகைகளுக்கு ஏன் அதீத மோகம், தெரியவில்லை. தனம் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தை விரும்பி ஏற்று நடித்துள்ளார் சங்கீதா. அறை எண் 305ல் கடவுளில் ஜோதிர்மயி. ஐஸ்வர்யா ராயும் புதிய ஹாலிவுட் படத்தில் பாலியல் தொழிலாளியாக வருகிறார்.
இந்த ஜோதியில் புதிதாக நவ்நீத் கவுர். இந்தியில் சுதிர் மிஸ்ரா இயக்கிய படம் Chameli. கரீனா கபூர் இதில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். கரீனாவின் பளீர் இடை தெரியும் அவரது சேலை கட்டும் ஸ்டைலுக்காகவே ஓடிய படம் இது.
தமிழில் ரீ- மேக்காகும் Chameli யில் கரீனா கபூரின் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார் நவ்நீத் கவுர்.
கரீனாவைப் போல கவுருக்கும் பளீர் இடை. தயாரிப்பாளர் பர்சுக்கு பாதகம் நேர வாய்ப்பில்லை.