Publish Date: Wed, 18 Jun 2008 (17:24 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
மீரா ஜாஸ்மினை அவிழ்க்க முடியாத புதிர் என்றும் சொல்லலாம். அழகான புதிர் என்றும் சொல்லலாம்.
குடும்பத்துடன் பிரச்சனை, கால்ஷீட் குளறுபடி, படப்பிடிப்புக்கு தாமதம், மாண்டலின் சகோதரருடன் காதல் என்று பிரச்சனைகள் ஒருபுறம். இன்னொரு புறம் இவர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள்.
தெய்வமகன் படத்தில் பெயர் தெரியாத ஒரு புதுமுகத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். சினேகா போன்ற மிடில் ஏஜ் நடிகைகளே நடிக்கத் தயங்கும் விஜயகாந்துடனும் ஒருபடம் நடிக்கிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரிக்கிறார். விக்ரமன் இயக்கம். கதையை கேட்டு சொக்கிப் போன மீரா ஜாஸ்மின் உடனே கால்ஷீட் கொடுத்துள்ளார்.
கதையை கேட்டவர் ஹீரோ யார் என்று விசாரித்திருக்க மாட்டார் என கிண்டலடிக்கிறார்கள், சீனியர் நடிகர்களை தவிர்க்கும் சில ஜுனியர் நடிகைகள்.