Publish Date: Wed, 18 Jun 2008 (17:23 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
ஜெமினி பிலிம் சர்க்யூட் ஷெனாயா பிலிம்சுடன் இணைந்து தயாரிக்கும் படம் போடா போடி. சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.
சிலம்பாட்டம் படத்தில் சனா கான், சினேகா ஆகியோருடன் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. எஸ்.சரவணன் இயக்கும் இப்படம் முடிந்ததும் போடா போடிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு கனடாவில் தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை எடுப்பதாக திட்டம். இதற்காக இப்போதே பாடல் கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் தரண்.
கைவிடப்பட்ட கெட்டவன் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்பு தயாரித்து இயக்கி நடிப்பதாகவும், ஜெனிலியா அவருக்கு ஜோடி எனவும் சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை மறுத்த சிம்பு, இன்னும் இரண்டு வருடங்களுக்கு படம் இயக்குவதில்லை என்ற தனது முடிவில் மாற்றமில்லை என்றார்.