கமிஷனைத் தாண்டி கல்லா கட்டிவிட்டார் என தனது மேனேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் மாளவிகா. இதுகுறித்து முனுசாமியிடம் தொலைபேசியில் விசாரித்தார் சரத்குமார்.
முனுசாமி மீது மாளவிகா ஒரு புகார் கூறினால், பதிலுக்கு வண்டி வண்டியாக புகார் புராணம் படித்தாராம் முனுசாமி. நான்தான் மாளவிகாவின் செலவிற்குப் பணம் கொடுத்தேன், ஃபீல்டில் முன்னுக்குக் கொண்டு வந்தேன், மாளவிகாதான் ஆள் வைத்து மிரட்டினார்... இப்படி.
தன்னை ஃபீல்டை விட்டே காலி செய்து விடுவதாக முனுசாமி மிரட்டினார் என்பது மாளவிகாவின் இன்னொரு புகார். இதற்கு முனுசாமி அளித்த கமெண்ட், அதுக்கு அந்த அம்மா ஃபீல்டில் இருந்தால்தானே!