கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் ஆக்சன், கொஞ்சமோ கொஞ்சம் கதை (தேவையென்றால்) அதுதான் சுந்தர் சி. ஃபார்முலா. இந்த ஃபார்முலாவில் தயாராகி வருகிறது ஐந்தாம்படை.
இதில் கவர்ச்சிக்கு எக்ஸ்ட்ராவாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார் சுஜா. பொண்ணு ஊருக்குப் புதுசு படத்தில் இளையராஜா இசையமைத்திருப்பாரே ஒரு பாடல், ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது. அந்தப் பாடலை டி.இமான் ரீ-மிக்ஸ் பண்ண பொள்ளாச்சியில் சுந்தர் சியும் சுஜாவும் குத்தாட்டம் போட்டனர்.
ஐந்தாம்படையென்று பெயர் வைத்து சுந்தர் சியை மட்டும் ஆடவிட்டால் எப்படி. உடன் நாசர், முகேஷ், விவேக், சாய் பிரசாந்தையும் ஆடவிட்டார் இயக்குநர் பத்ரி.
கொஞ்சம் கவர்ச்சி ஃபார்முலா சுஜா வரவால் நிறையவே களைகட்டி விட்டது.