இதுவரை வெளியான அனைத்துத் தமிழ்ப் படங்களின் ஓபனிங் வசூல் சாதனையை உடைத்திருக்கிறது தசாவதாரம். சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களுடன் ஒப்பிட்டாலே தசாவதாரத்தின் பிரமாண்ட வசூல் தெரிந்துவிடும்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய சக்சஸான சந்தோஷ் சுப்பிரமணியம் ஒன்பது வாரங்கள் முடிவில் சென்னையில் வசூலித்த தொகை 2.9 கோடிகள். குருவி ஆறுவார இறுதியில் வசூலித்த மொத்த தொகை 2.91 கோடிகள்.
இந்த இரண்டு படங்கள் ஒன்பது மற்றும் ஆறு வாரங்களில் வசூலித்த தொகையின் மூன்றில் ஒரு பங்கை மூன்றே நாளில் வசூலித்திருக்கிறது தசாவதாரம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் முடிவில் கமல் படத்தின் சென்னை வசூல் மட்டும் தொண்ணூற்று ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்.
பத்தே நாளில் சந்தோஷ் சுப்ரமணியம், கருவி படங்களின் பத்துவார வசூலை தசாவதாரம் கடந்துவிடும். நிஜமாகவே சாதனைதான்.