நாளை கும்பகோணத்தில் தனது அடுத்த கமர்ஷியல் கும்பமேளாவைத் தொடங்குகிறார் இயக்குநர் பேரரசு. சென்டிமென்ட் என்ற பெயரில் கழுத்தைப் பதம் பார்க்கும் சமாச்சாரம் எல்லாம் இதில் இல்லையாம். ஏ டு இசட் கமர்ஷியல்தானாம்.
முதல்வனில் நடித்த அர்ஜூனுக்கு திருவண்ணாமலையில் புரமோஷன். முதல்வனில் தொலைக்காட்சி நிருபர். இதில் லோக்கல் சேனலின் முதலாளி. இவருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் முட்டிக்கொள்ள கராத்தே, குங்ஃபு என சண்டை வித்தைகளைக் காட்டி அர்ஜூன் அவர்களை வதம் செய்வது கதை.
பொதுவாக ஷோலோ காமெடியன்களைப் பேரரசு பயன்படுத்துவது இல்லை. வடிவேலு, விவேக் எல்லாம் அவருக்கு அலர்ஜி. அதிகபட்சமே பெஞ்சமின் வகையறாக்கள்தான். திருவண்ணாமலையில் கருணாஸ் நடிப்பது ஓர் ஆச்சர்யம். நாயகி சானியா எனும் குச்சி ஐஸ். (ஆள் அப்படித்தான் இருக்கிறார்)
எச்சரிக்கை... இதிலும் பஞ்ச் டயலாக் பேரரசு ஸ்பெஷல் தோற்றத்தில் வருகிறார்.