தமிழில் ரஹ்மான் இசையைக் கேட்டு நிறைய நாளாகிறது என்று குறைபட்டுக்கொள்ளும் அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி. அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சக்கரக்கட்டி படத்தின் இசை வெளியீடு.
தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்க, பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அறிமுகமாகும் சக்கரக்கட்டி. இசைப் புயலின் தாமதத்தால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒருவழியாக ரஹ்மான் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைக்க, படத்தை எடுத்து முடித்து விட்டார் கலாபிரபு.
ஜூலை 11 ஆடியோ வெளியீட்டு விழா. ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்டில் படத்தைத் திரையில் எதிர்பார்க்கலாம்.