லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவில்லை, அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்ததாக வெளியான செய்தியை லிங்குசாமியின் சகோதரரும் படத்தின் தயாரிப்பாளருமான போஸ் மறுத்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு கார்த்தி, திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார். கார்த்தி அட்வான்ஸை திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்படுவதில் உண்மையில்லை என்றார். எனினும் கார்த்தி தரப்பில் இதுவரை மவுனமே பதிலாக உள்ளது.
இன்னொரு மறுப்பு ஷங்கர் அலுவலக வட்டாரத்திலிருந்து வந்துள்ளது. நாங்கள் தள்ளிப் போவதால் ஐஸ்வர்யாராய் ரோபோவிலிருந்து விலகி விட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. ஆகஸ்டில் தொடங்கும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். ரஜினி- ஜஸ்வர்யாராய் காதல் டூயட்டை வியட்நாமில் படமாக்குகிறார் ஷங்கர் என ஐஸ்வர்யாராயின் விலகல் செய்தியை மறுத்துள்ளனர்.
மறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருந்தால் மறுப்புகளுக்கொரு விறைப்பு கிடைத்திருக்கும்!