நியூட்டனின் மூன்றாம் விதி படப்பிடிப்பில் விபத்துக்குள்ளாகி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா.
வேளச்சேரி சாலையில் எஸ்.ஜே.சூர்யாவின் பைக்கை படத்தின் வில்லன் ராஜீவ் கிருஷ்ணா காரில் துரத்துவதாக சேஸிங் காட்சி எடுக்கப்பட்டது. இதில் கார் நிஜமாகவே பைக் மீது மோத, தூக்கியெறியப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா. காரின் ஹெட்லைட் முகத்தை தாக்கியதில் முகத்திலும் ரத்தக் காயம்.
வலியில் இருக்கும் சூர்யாவுக்கு காயத்துக்கு களிம்பாக நடந்திருக்கிறது ஒரு நிகழ்ச்சி. முன்னணி ஹீரோக்களின் படங்களை வாங்க தொலைக்காட்சி சேனல்களுக்குள் போட்டி நடக்கும். படப்பிடிப்பில் இருக்கும் நியூட்டனின் மூன்றாம் விதியை வாங்கவும் கடும் போட்டியாம். இறுதியில் கலைஞர் தொலைக்காட்சி பெரும் தொகைக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியதாம்.
ஒரு ஹீரோ சந்தோஷமடைய இந்த ஒரு விஷயம் போதாதா?