அம்புக்கு தப்பிய புலி எலியின் பொந்துக்குள் சிக்கும் அவலம் எப்போதாவது நேரும். அப்படியொரு நிலைமை பிரகாஷ் ராஜூக்கு.
இவரின் கடன்பட்டியலைப் பார்த்தால், சாதாரண ஜனம் பார்த்த கணம் மயங்கிவிடும். கடன் எல்லாமே கோடிகளில். இதுதவிர மனைவியுடனான விரிசல்.
இத்தனை மலைகளை ஒற்றை ஆளாக சுமக்கும் பிரகாஷ்ராஜை சின்ன கல் ஒன்று இடறி விட்டிருக்கிறது.
தெலுங்கு ஆசாமி ஒருவரிடம் ஐந்து லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அதற்கு கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் திரும்ப வந்திருக்கிறது.
பணம் கொடுத்த நபர் வழக்கு தொடர, சென்ற வியாழன் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜமுந்திரி கோர்ட் பிரகாஷ்ராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஷூட்டிங்கை மதிக்காதவர் நோட்டீஸையும் மதிக்கவில்லை. பணிந்து போக கோர்ட் என்ன அம்மாஞ்சி தயாரிப்பாளரா?
பிரகாஷ்ராஜை பிடிக்க பிரவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இப்போது புலி பதுங்கித் திரிவதாக கேள்வி.