முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து தசாவதாரத்தைப் பார்த்த வி.ஐ.பி. யார் என்றால், அது மு.க.அழகிரி தான்.
உதயநிதி ஸ்டாலின் குருவியை தயாரித்தப் பிறகு அழகிரியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது என்கிறார்கள். சன் தொலைக்காட்சி ராதிகாவின் டாடனுடன் இணைந்து படம் தயாரிப்பதும் இந்த திடீர் மாறுதலுக்கு காரணம்.
முதல்வர் தசாவதாரத்தை பார்த்ததற்கு மறுநாள், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு பெட்டி மதுரைக்கு அனுப்பப்பட்டது. வெற்றி திரையரங்கில் அதனை பார்த்திருக்கிறார் மு.க.அழகிரி.
இதைத் தொடர்ந்து நாயக்கர் மஹாலில் நடந்த ஜகன்மோகினி தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார். இதுவரை படம் மட்டுமே பார்த்து வந்தவர், படத்தின் பட்ஜெட், டெக்னிகல் விவகாரங்கள் என ஆஃப்தி ஸ்கிரீன் விஷயங்களிலும் ஆர்வம் காட்டுகிறாராம்.
விரைவில் அழகிரி பேனரில் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கப்படலாம் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.