பேசாமல் குபேரன் என்று வைத்திருக்கலாம். படத்தின் வியாபாரத்தை வைத்துப் பார்க்கையில் குசேலனைவிட குபேரனே சாலப் பொருத்தம்.
கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து குசேலனை தயாரிக்கின்றன. தெலுங்கில் குசேலுடு. ஜி.வி.பிரகாஷ் குமர் இசை. முதன் முறையாக தலேர் மெகந்தி குசேலனுக்காக தமிழில் பாடியிருக்கிறார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஒலிப்பதிவு கூடத்தில் குசேலன் ஒலிப்பதிவு நடந்தது.
இவையெல்லாம் விஷயமில்லை. குசேலன் ரஜினி படம். இந்த ஒரு காரணமே பிரதானம். குசேலனின் தமிழ், தெலுங்கு (குசேலுடு) ஆடியோ உரிமை 2.25 கோடிகளுக்கு விற்பனையாகி இருக்கிறது. பிக் நிறுவனம் இந்தப் பெருந்தொகை கொடுத்து உரிமையை வாங்கியுள்ளது.
தசாவதாரத்தின் ஆடியோ உரிமை இரண்டு கோடிகளுக்கு விலைபோனது. சோனி எம்.ஜி.எம். வாங்கிய அந்தத் தொகையை விட இது இருபத்தைந்து லட்சங்கள் அதிகம்.
கமல் உலகைச் சுற்றிய முருகன் என்றால், ரஜினி இருந்த இடத்திலேயே ஞானப்பழம் பெற்ற பிள்ளையார்!