எஸ்.பி.பி.சரண் ஒரு பாடகர், பிறகு நடிகர். 'உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் தயாரிப்பாளர். இதில் தயாரிப்பாளர் ஸ்தானமே சரணின் பெயரை வெளிக் கொண்டு வந்தது. உபயம் சென்னை 600 028.
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை தயாரித்து வருகிறவர். சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளார். எண்பதின் காதல் கதையான இதில் முன்னணி நட்சத்திரம் என்று யாரும் இல்லை. படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளார்.
நம்பிக்கை ஜெயித்தால் தயாரிப்புடன் பட விநியோகத்திலும் தீவிர கவனம் செலுத்த இருக்கிறாராம் சரண்.