1979ஆம் ஆண்டு கமல், ரஜினி, ஜெயப்ரதா நடிப்பில் வெளிவந்தது 'நினைத்தாலே இனிக்கும்'. பாலசந்தரின் இளமை துள்ளும் கதை இன்னும் அதன் மெருகு குலையாமல் இருப்பது ஆச்சரியம்.
29 வருடங்களுக்குப் பிறகு பாலசந்தரின் கவிதாலயா இதனை ரீ-மேக் செய்கிறது. நாளை, சக்கர வியூகம் படங்களின் இயக்குனர் உதயபானு மகேஷ்வரன் ரீ-மேக் படத்தை இயக்குகிறார்.
பாலசந்தரின் 'நான் அவனில்லை' படத்தை அதே பெயரில் ரீ-மேக் செய்தே, தமிழின் முதல் ரீ-மேக் படம். அவரின் நூற்றுக்கு நூறு படமும் விரைவில் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. 'நினைத்தாலே இனிக்கும்' மூன்றவாது.
இதனை இந்தியில் ரீ-மேக் செய்ய கவிதாலயா திட்டமிட்டுள்ளது. கதைக்கேற்ற நடிகர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளார் இயக்குனர் உதயபானு மகேஷ்வரன்.