சிவாஜி பார்த்து ரஜினியை பாராட்டினார் அமிதாப். இப்போது ரஜினியின் முறை. சர்க்கார் ராஜ் படத்தைப் பார்த்து, நெகிழ்ந்து போகும் அளவுக்கு பாராட்டியுள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் சர்க்காரின் இரண்டாம் பாகம் சர்க்கார் ராஜ். இதில் அமிதாப்பச்சனின் நடிப்பைப் பார்த்து வியந்த ரஜினி, இதுவரையான உங்கள் நடிப்பில் இதுதான் டாப் என பாராட்டியிருக்கிறார். இதில் மகிழ்ந்து போன இந்தி சூப்பர் ஸ்டார், ரஜினி மாதிரி ஒரு நடிகரின் பாராட்டு ரொம்ப ரொம்ப முக்கியமானது என்றிருக்கிறார்.
பாராட்டுவதில் ரஜினியை மிஞ்ச முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.