Publish Date: Sat, 14 Jun 2008 (17:35 IST)
Updated Date: Sat, 14 Jun 2008 (17:35 IST)
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் அந்நியன் படத்தில், இன்சூர் செய்வதை தொடங்கி வைத்தார். இப்போது எல்லோரையும் இன்சூர் மேனியா பீடித்திருக்கிறது.
விபத்தோ வேறு ஏதேனும் பொருளிழப்போ ஏற்பட்டால் பெரிய பட்ஜெட் படங்களின் நிலை அப்பளமாகிவிடும். அதை தவிர்க்க, அந்நியன் படத்தை 27 கோடிக்கு இன்சூர் செய்தார் ரவிச்சந்திரன். தசாவதாரம் படம் 43 கோடிகளுக்கு இன்சூர் செய்யப்பட்டது.
இன்சூர் விஷயத்திலும் ரஜினியே சூப்பர் ஸ்டார். இவரது குசேலன் இன்சூர் செய்யப்பட்டிருப்பது எழுபது கோடிகளுக்கு! செலவே இல்லாத குசேலனுக்கே எழுபது என்றால், ரோபோவுக்கு...?
நினைக்கும்போதே மூச்சை அடைக்கிறது!