Publish Date: Thu, 12 Jun 2008 (20:19 IST)
Updated Date: Thu, 12 Jun 2008 (20:18 IST)
எண்பதில் வெளிவந்த மலையூர் மம்பட்டியானை மறக்க முடியாது. தியாகராஜன் ஏற்று நடித்த ராபின் ஹூட் கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழை தேடித் தந்துள்ளது.
இதன் ரீ-மேக்கில் பிரசாந்த் நடிப்பதாக பல மாதங்கள் முன்பே பேச்சு எழுந்தது. அதனை உறுதி செய்ததுடன் அடுத்து மலையூர் மம்பட்டியான் ரீ-மேக்கில் நடிப்பதாகவும் கூறினார் பிரசாந்த்.
வரதட்சணை சர்ச்சையிலிருந்து மீண்டிருப்பவர், ஜூலையல் மலையூர் மம்பட்டியான் ரீ-மேக்கிற்காக மீண்டும் மேக்கப் போடுகிறார். தியாகராஜன் இயக்க பிரசாந்தின் சொந்த படமாக அது இருக்கும்.
சென்சார் பிரச்சனையில் சிக்கிய புலன் விசாரணை இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தவிர அரை டஜன் புராஜெக்டுகள் பிரசாந்த் கைவசம் உள்ளதாம். விரைவில் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக பிரசாந்தை ஃபீல்டில் பார்க்கலாம்!