எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே குருவி பற்றிய பேச்சு. அதற்கேற்ப திரையரங்குகிளல் கூட்டமும் இல்லை. ஆனாலும் பாக்ஸ் ஆஃபிஸில் இன்னமும் குருவியே டாப்!
வெளிநாட்டைப் பொறுத்தவரை குருவிக்கு நல்ல கலெக்சன். அதாவது பிற தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக இங்கிலாந்தில் கமல், ரஜினி, மணிரத்னம், ஷங்கர் படங்கள் தவிர்த்து எந்தப் படம் வெளியானாலும், கலெக்சன் சில லட்சங்கள் மட்டுமே இருக்கும். விதிவிலக்கு குருவி.
முப்பது நாட்களுக்குள் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கு மேல் விஜய் படம் வசூலித்துள்ளது. இளம் ஹீரோக்களின் படங்களைப் பொறுத்தவரை இது சாதனை.
குருவியின் உள்ளூர் துயரங்களுக்கு இந்த வெளிநாட்டு சாதனை ஒரு சின்ன ஒத்தடம், அவ்வளவே!