அனைத்து கமல் ரசிகர் நற்பணி மன்றங்களும் சுற்றறிக்கை சென்றுள்ளது. கமல் சார்பில் கமல் நற்பணி மன்றத் தலைவர் குணசேகரன் இதனை அனுப்பியிருக்கிறார். இதன் சாராம்சம் தசாவதாரத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்க வேண்டும் என்பதை பற்றியது.
கமலுக்கு நண்பணியே பிரதானம். தோரணம், கட்-அவுட், பாலாபிஷேகம், பீரபிஷேகம் எல்லாம் அலர்ஜி. ரசிகர்கள் கமலுக்கு அலர்ஜி ஏற்படுத்தாதவண்ணம் நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைவரின் விருப்பம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்து, நற்பணிகள் செய்வதென ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை தசாவதாரம் ரிலீஸையொட்டி இந்த நற்பணிகளை செய்ய உள்ளனர். நடுவில் கட்-அவுட், பாலபிஷேகம் எல்லாம் நடக்கலாம். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அணை போட முடியுமா?