மறைந்த பிறகும் ஓய்ந்து போகவில்லை எம்.ஜி.ஆர். புகழ். வெவ்வேறு வடிவங்களில் அவரது நினைவு தமிழகத்தில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.
நானா படேகர், ஜான் ஆபிரகாம் நடித்த டாக்சி நெ. 9211 தமிழில் ரீ- மேக் ஆகிறது அல்லவா. அதற்கு ஏதேதோ பெயர் வைத்தார்கள். எதுவும் நிலைக்கவில்லை. கடைசியாக எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
தி.நகர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் எம்.ஜி.ஆரின் கார் அன்றைய தமிழர்களிடையில் பிரபலம். அதன் டி.என்.07 ஏ.எல். 4777 எண் தொண்டர்களிடையே பிரபலம்.
பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி நடிக்கும் ரீ-மேக் படத்திற்கு இந்த கார் நம்பரையே பெயராக வைத்துள்ளனர். டி என்... ஏ எல் என்றெல்லாம் ஆங்கிலம் வருவதால் வரிச்சலுகை மட்டும் கேள்விக்குறி!