நெப்போலியனின் நெஞ்சில் ஆறாமை தீ. உரியவர் மதிக்காததால் முதல்வர் கலந்து கொண்ட ப்ரிவியூவையே புறக்கணித்துள்ளார் நெப்ஸ்.
தசாவதாரத்தில் மன்னராக நடித்துள்ளார் நெப்போலியன். சின்ன வேடம் என்றாலும், உச்சி வெயிலில் நான்கைந்து நாள் யானை மீது அமர்ந்து சிரமப்பட்டிருக்கிறார். தவிர முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் பல படங்களின் கதாநாயகன்.
அவரை ஆடியோ விழாவில் உரிய முறையில் கவுரவிக்கவில்லையாம். கவுரவம் என்றால் பட்டாடையும் பரிவட்டமும் அல்ல. கே.எஸ்.ரவிக்குமார் தனது பேச்சில் மறந்தும் இவர் பெயரை உச்சரிக்கவில்லையாம். இதனால் கலைஞருடன் தசாவதாரம் பார்க்க கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பு விடுத்தும் மாவீரன் செவிசாய்க்கவில்லையாம்.
நெப்போலியனின் ஆதங்கத் தீ அத்தனை எளிதில் அணையக் கூடியதா என்ன!